July 8, 2025
பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த இலங்கை…
இலங்கை அரசியல் புதிய செய்திகள்

பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த இலங்கை…

Jun 17, 2024

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கைப் பொருளாதாரம் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 2022 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12% க்கும் குறைவான எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்ட ஒரு நாடாக பதிவான இந் நாட்டின், இந்த நிலைமையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் இலங்கையின் பொருளாதார பயணத்தை நம்பிக்கையுடன் பார்க்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் குறைந்த (மைனஸ்) 7 இற்கு மேல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு நாட்டில், இரண்டு வருடங்களில் 2% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தமை மிகவும் நல்ல சாதனை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை பின்பற்றும் வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தினால் தெளிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *