இலங்கை தனக்கு கடன் வழங்கிய உத்தியோகபூர்வ கடன்கொடுப்பனவாளர்களுடன் விரைவில் இறுதி உடன்படிக்கைகளை பூர்த்தி செய்வது அவசியம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட கடன்கொடுப்பனவாளர்களுடன் இலங்கை தீர்மானமொன்றிற்கு வருவது அவசியம் எனவும் சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளின் இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் இந்தகருத்து வெளியாகியுள்ளது.
இலங்கையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுகின்றன என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
எனினும் இந்த முன்னேற்றங்கள் இலங்கை மக்களின் வாழ்க்கை தரத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதால் சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.
2023ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு பகுதியில் சாதகமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி காணப்பட்டுள்ளது பணவீக்கம் குறைவடைந்துள்ளது வருமானங்களை பெற்றுக்கொள்ளுதல் அந்திய செலவாணி கையிருப்பு அதிகரித்தமை போன்றவற்றில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது எனவும் சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது.