யாழ். ஊர்காவற்றுறை, பெண்கள் பாடசலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியின் சித்திரவதை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுவதோடு மாணவிகளை கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனையடுத்து ஊர்காவற்றுறை பொலிசாரால் மாணவிகளை இன்று யாழ். போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பித்தக்கது.