பொலித்தீன் பைகள் பயன்பாடு 50% குறைவு – புதிய ஒழுங்குமுறையினால் பாரிய மாற்றம்!
இலங்கையில் பொலித்தீன் பைகளின் பயன்பாடு புதிய ஒழுங்குமுறை அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறிப்பிடத்தகுந்த அளவில் குறைந்துள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஒழுங்குமுறை கடைகளில் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுக்கிறது.
மேலும் அமைச்சகத்தின் தகவலின்படி,
நாட்டில் தினமும் சுமார் 2 கோடி பொலித்தீன் பைகள் பயன்படுத்தப்பட்டன. எனினும், நவம்பர் 1ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் அமுலுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஒரு முன்னணி தனியார் அங்காடித் தொடர் நிறுவனத்தில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் பொலித்தீன் பைகள் வழங்கப்பட்ட அளவு 50% குறைந்ததாக பதிவாகியுள்ளது.
பொலித்தீன் பைகளின் அதிகப்படியான வெளியீடு சூழலுக்கு ஏற்படுத்தும் தீமைகளை குறைப்பதே இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
![]()