தீர்வை வரி செலுத்தப்படாத ஒரு தொகைப் பொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனி, புத்தளம், கொலன்னாவை மற்றும் வீரகெட்டிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
மறைத்து வைத்து வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதில், மடிகணினிகள், அப்பிள் கையடக்க தொலைபேசிகள், கையடக்கத் தொலைபேசிகளின் உதிரிப்பாகங்கள், வெளிநாட்டு சிகரெட்டுக்கள், தங்க நகைகள், மதுபான வகைகள், கார்களுக்கான உதிரிப்பாகங்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.