மாத்தளை, வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் துப்பாக்கியைத் திருடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் வில்கமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் அரலகங்வில பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த நபர் வில்கமுவ, நுககொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது நபரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை திருடியதாக கூறப்படும் துப்பாக்கி நுககொல்ல பிரதேசத்தில் உள்ள புத்தர் சிலையொன்றிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் வில்கமுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.