மிரிஹான பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடைமைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் நேற்று (24.06) கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 30 – 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், துனுவாங்கிய பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிரிஹான பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையில் அவரது வீட்டிற்கு வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சந்தேக நபர்களை இன்று(25.06) நீதிவான் நீதிமன்றத்தில் முந்நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.