பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முன்னெடுப்பில், பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ எனும் நவீன அழகு கலை நிலையம் நேற்று (15) திறக்கப்பட்டது.
இந்த சிகை அலங்கார நிலையம், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் நடைபெற்று, அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகை விலையில் அழகு சேவைகளை வழங்கும் முக்கிய வாய்ப்பாகும்.
முந்தைய காலங்களில் இங்கு சேவை பெற்றவர்கள் பொலிஸ் அதிகாரிகள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது பெண் பொலிஸ் அதிகாரிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் வெளி தரப்பினருக்கும் இங்கு அழகு சேவைகள் சலுகை விலையில் கிடைக்கும்.
மேலும், அனுபவமுள்ள அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் இங்கு பணியாற்ற வாய்ப்பளிக்கப்படுவதை இதன் சிறப்பம்சமாக குறிப்பிடலாம்.
பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் பதில் தலைவர் நில்மினி சமரதுங்க, சங்க உறுப்பினர் சந்தீபா செவ்மினி மற்றும் பொலிஸ் களப் படை தலைமையக கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி ஆகியோரின் ஆலோசனை மற்றும் மேற்பார்வையில் இந்த அழகு கலை நிலையம் வெற்றிகரமாக மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



