கொழும்பு, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜமல்வத்தை பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு, ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 05 கிலோ கிராம் 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.