பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குழுவொன்று தாக்குதல் நடத்தியதுள்ளது.
இச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.