
போச்சுடா சாமி…தலையில் கை வைத்த வெங்கட் பிரபு: வைரலாகும் யுவன் சங்கர் ராஜா போஸ்ட்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் வைரலாகி வருகின்றது.
வெங்கட் பிரபு இயக்கி வரும் விஜய்யின் கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகின்றார்.
இரண்டு பாடல்கள் வெளியான நிலையில், கோட் படத்தின் மூன்றாவது பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
மூன்றாவது பாடல் வெளியாகும் என்று வெங்கட் பிரபு அறிவித்து மூன்று நாட்களை கடந்து விட்ட நிலையில், அப்டேட் கேட்டு ரசிகர்கள் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்நிலையில், யுவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தில் வெங்கட் பிரபுவும், இயக்குநர் விஷ்ணுவர்தனும் தரையில் அமர்ந்து போச்சுடா சாமி என்பது போன்று தலையில் கை வைத்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவோ செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த போஸ்ட்டை பார்த்த ரசிகர்களோ, சாரி வெங்கட் பிரபு, யுவன் தான் இதற்கு காரணம் என தெரியாமல் உங்களை போய் கேள்வி மேல் கேள்வி கேட்டுவிட்டோம் என்கிறார்கள்.
வெங்கட் பிரபு தலையில் கை வைத்திருப்பது புரிந்திருக்கும். ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கரை வைத்து விஷ்ணுவர்தன் இயக்கி வரும் நேசிப்பாயா படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசை. அதனால் அப்டேட் கேட்டு அவரும் தலையில் கை வைத்துவிட்டார்.