நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் நேற்று (15) இரவு நீர்கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் துனகஹ மற்றும் மினுவாங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 31 மற்றும் 39 வயதுடையவர்கள் என்றும் குறித்த சந்தேக நபர்களில், ஒருவரிடமிருந்து 20 கிராம் 315 மில்லி கிராம் ஹெரோயினும் மற்றவரிடமிருந்து 12 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர் கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.