குருணாகல், மெல்சிறிபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து பேர் நேற்று (17.07) கைது செய்யப்பட்டுள்ளதாக மெல்சிறிபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த மூன்று முச்சக்கரவண்டிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரள்ளை, பன்லியத்த மற்றும் தம்புள்ளை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 20, 23, 27 மற்றும் 29 வயதுடைய நான்கு நபர்களும் பொரள்ளை பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 49 கிராம் 1,350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மெல்சிறிபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here