November 17, 2025

போதைப்பொருள் அற்ற நாட்டை இன்னும் ஒன்றரை மாதத்துக்குள் உருவாக்குவோம் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி 2 மாதங்கள் சிறையில் வைத்திருந்து வெளியில் அனுப்பும் முறைமையை இல்லாமல் செய்து  அதற்குப் பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு, உழைத்த அவரது அனைத்து சொத்துக்களையும் அரச உடமையாக்கும் முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருளினால் சம்பாதித்த  726 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *