பிலியந்தலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் போதைபொருள் கடத்தல்காரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த சந்தேகநபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
மேலும் குறித்த சந்தேகநபர் பயணித்த காரை பொலிஸார் இடைமறித்துள்ளனர்.
இதன்போது தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
காயமடைந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் நீண்ட நாட்களாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
Post Views: 2