போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அடையாளம் காண காவல்துறை விசேட நடவடிக்கை!
காவல்துறை போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானவர்களை அடையாளம் காண காவல்துறை கணக்கெடுப்பு நடத்தவுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல் துறை மா அதிபர் (சிறப்பு பிரிவு) எப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுபடச் செய்வதற்காக மறுவாழ்வு திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் போதைப்பொருளுக்கான தேவை குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் வியாபாரிகளை இலக்காகக் கொண்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அண்மைய நாட்களில் பல போதை விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
போதைப்பொருள் வழங்கலை தடுக்கவும், தேவையைக் குறைக்கவும், அதே நேரத்தில் பழக்கத்திலுள்ளவர்களை மறுவாழ்வு பெறச் செய்வதற்கும் இந்நடவடிக்கைகள் உதவும் எனவும் காவல்துறை பேச்சாளர் வூட்லர் தெரிவித்தார்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு வெளியிட்ட புள்ளிவிபரங்களின்படி, 2024ஆம் ஆண்டில் மட்டும் 2,28,450 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
![]()