December 13, 2025
போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை..!
News News Line Top Updates புதிய செய்திகள்

போதைப்பொருள் வியாபாரி வெட்டிப் படுகொலை..!

Mar 14, 2024

கம்பஹா-கந்தானை பிரதேசத்தில் நேற்று(13) பகல் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரது வீட்டுக்கு முன்பாக ஹயஸ் வாகனத்தில் வந்த நான்கு பேர் அடங்கிய வன்முறைக் கும்பல், மேற்படி நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் குறித்த  சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *