போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இரத்மலானை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய பெண்ணொருவர் என தெரியவந்துள்ளது.
மேலும் ,சந்தேக நபரிடமிருந்து 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
Post Views: 2