இஸ்ரேல் – பலஸ்தீனத்துக்கு இடையில் நீண்ட காலமாக போர் நடந்து வருகின்ற நிலையில், பட்டினியின் காரணமாக காசா குழந்தைகள் உயிரிழக்கும் வீதம் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதுவரையில் 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு, 86,000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பொதுவாக பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்ற ஒரு போர் விதி உள்ளது.
ஆனால் இந்த விதியையும் மீறி இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டுள்ளமையை உலக நாடுகள் வன்மையாக கண்டிக்கின்றன.
போரின் நிமித்தம் உணவுப் பொருட்கள் எதையும் காசாவுக்குள் கொண்டு செல்ல முடியவில்லை.
இதன் காரணமாக அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு, பசி, பட்டினி போன்றவற்றால் அதிகளவில் உயிரிழப்பார்கள் என ஐ.நா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.