காசா மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த உடன்பட்டு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படவுள்ளனர்.
இதற்கு பதிலாக ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம் 4 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளது.