Tamil News Channel

போலி தங்க நகைகளை பயன்படுத்தி பண மோசடி!

24-6684e802744b7

பதுளையில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில்  போலி தங்க நகைகளை பயன்படுத்தி 19,670,000 ரூபாவை மோசடி செய்த  நபரை பதுளை பொலிஸ் பிரிவின் விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

தனியார் நிதி நிறுவன உரிமையாளர் செய்த முறைப்பாட்டின்  அடிப்படையில் சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன் போது சந்தேகநபரிடம் இருந்து 41 போலி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிதி நிறுவனத்திற்கு பல்வேறு நபர்கள் வந்து நகைகளை அடகு வைத்த போது, சந்தேக நபர் அவர்களிடம்  போலியான ஆவணங்களை வழங்கியுள்ளார்.

அதன் பின் அந்த நகைகளுக்கு சமமான போலி நகைகளை இணையம் மூலம்  இறக்குமதி செய்து அதனை குறிப்பிட்ட நகையின் பைகளில் இட்டு  உண்மையான  நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடகு வைக்கப்பட்ட நகைகளை தொடர்பான வட்டியை சந்தேகநபர் அதன் உரிமையாளர்களின் பெயரில் செலுத்தியுள்ளமையும் விசாரனைகளில் தெரியவந்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts