மொரட்டுவை பிரதேசத்தில் எகொட உயன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் 48 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 5 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் 2 மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடும் இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொட உயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2