February 7, 2026
பௌத்த கொடியின் வர்ணங்களில் ஒளிரவுள்ள தாமரை கோபுரம் ..!
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

பௌத்த கொடியின் வர்ணங்களில் ஒளிரவுள்ள தாமரை கோபுரம் ..!

May 22, 2024

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் பௌத்த கொடியிலுள்ள வர்ணங்களில் ஒளிரும் என தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை வியாழக்கிழமை (23) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24)தாமரை  கோபுரம் பௌத்த கொடி வர்ணத்தில் ஒளிரும்.

கொழும்பு தாமரை கோபுரத்தில் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் வெசாக் பண்டிகையை கொண்டாடுமாறு நிர்வாகம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், வெசாக் தினங்களில் பிக்சல் ப்ளூம் புத்தம் புதிய, ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை அனுபவிக்கும் நேரத்தையும் தாமரை கோபுர நிர்வாகம் அறிவித்துள்ளது.

அட்தனடிப்படையில் 23 தொடக்கம் 25ஆம் திகதிகளில் 9.00am தொடக்கம் நல்லிரவு 1.00am வரை பார்வையிட முடியும் எனவும் 26 ஆம் திகதி 9.00am தொடக்கம் 10.00pm பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *