
ப்ளேஓப் வாய்ப்பு யாருக்கு?: டெல்லி – லக்னோ அணிகள் இன்று பலப்பரீட்சை!!!
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ப்ளேஓப் வாய்ப்பை உறுதிசெய்ய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகின்றது.
ஏற்கனவே, மும்பை, பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் ப்ளேஓப் வாய்ப்பை இழந்துள்ள நிலையில், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளிடையே போட்டி அதிகரித்துள்ளது.
அந்த வகையில் டெல்லி மற்றும் லக்னோ அணிகள் இன்று லீக் போட்டியில் மோதுகின்றன. இரு அணிகளும் தலா 12 புள்ளிகளை பெற்றுள்ள நிலையில், நிகர ஓட்ட வீதம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
இதில் டெல்லி அணி 13 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், அந்த அணிக்கு இன்றைய போட்டி இறுதி லீக் போட்டியாகும். அதேநேரம் லக்னோ அணிக்கு இன்றைய போட்டியை தவிர்த்து ஒரு போட்டி எஞ்சியுள்ளது.
ஆகையினால் இன்றையப் போட்டியில் இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற நிலையில் மோதவுள்ளன. இரு அணிகளும் பெரிய வெற்றிக்காக போராடவேண்டியுள்ளது.
டெல்லி அருன் ஜெட்லி மைதானத்தில் இரவு 07.30 மணிக்கு இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
தனது சொந்த மைதானத்தில் டெல்லி அணி விளையாடவுள்ளது. இது அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஹைதராபாத் அணியுடன் ஏற்பட்ட பெரும் தோல்விக்கு பிறகு லக்னோ அணி இன்றையப் போட்டியில் விளையாடவுள்ளது.