அநுராதபுரம் பிரதேசத்தில் இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இப்பலோகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பலோகம , ஹிரிபிட்டியாகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில், கொலை செய்யப்பட்டவரது 34 வயதுடைய மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் தினமும் தனது தந்தையை தாக்கி காயப்படுத்துவதாகவும் சம்பவத்தின் போது இருவரும் வீட்டில் தனியாக இருந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2