கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி மகா விகாரை மகாநாயக்க வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
மேலும் இலங்கை அடைந்துள்ள பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி மகாநாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தியதோடு, கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தையும் அவர்களுக்கு கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Post Views: 2