
மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்..!
தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் நாளை(03.08) வெளியாகவுள்ள நிலையில் அதன் ப்ரோமோ வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் உள்ளிட்டவை ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் நாளை இந்த படத்தின் 3வது சிங்கிள் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர்.
மேலும் இன்று 11 மணி அளவில் படத்தின் அடுத்த அப்டேட்டும் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சற்றுமுன்னர் நாளை வெளியாகும் பாடலில் ப்ரோமோ வீடியோ வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.