November 13, 2025
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்..!
News Top Updates புதிய செய்திகள்

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்..!

Mar 16, 2024

நிலவுகின்றன கடுமையான வறட்சியுடன் கூடிய வானிலை மற்றும் அதிகரித்த  நீர்ப்பாவனை போன்றவற்றினால் நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கால் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறிப்பாக தெஹிவளை, இரத்மலானை, மொரட்டுவை, பாணந்துறை, வாதுவை மற்றும் வஸ்கடுவ ஆகிய பிரதேசங்களுக்கான நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் இப் பிரதேசங்களுக்கான தொடர்ச்சியான தடையற்ற நீர் வழங்கலை மேற்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது.

எனவே, குறித்த பிரதேசத்தில் உள்ள பாவனையாளர்கள் நீரினை சிக்கனமாகவும் சேமிப்புடனும் பயன்படுத்துமாறும் இதுதொடர்பில் நீர் பாவனையாளர்களின் ஆதரவும் புரிந்துணர்வும் தமக்கு தேவைப்படுவதாகவும் தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *