கொழும்பு புறநகர் பகுதியான ஹோமாகம கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்களை உடனடியாக முகக் கவசம் அணியுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஹோமாகம கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு நச்சு வாயு சூழலில் பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தீப்பிடித்த குறித்த தொழிற்சாலையில் திருத்த பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் இன்று (08) அதிகாலை 2:00 மணியளவில் தொழிற்சாலையிலிருந்து நச்சு வாயு கசிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாலை 5.30 மணியளவில் எரிவாயு கசிவைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பகுதியில் புகைமூட்டமும் சூழலில் குளோரின் வாயு அதிகரித்தும் காணப்படுவதால் ஹோமாகம கைத்தொழில் வலயத்தை சுற்றியுள்ள மக்களை முகக்கவசம் அணியுமாறு சுகாதார திணைக்களமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.