மட்டக்களப்பில் இந்த தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதி கேள்விக்குறி; வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிரேஷ்ட அரசியல் தலைமைகள் இளைஞர்களுக்கு வழிவிட்டு தேர்தலிலே போட்டியிடாமல் விலகி இருக்கின்றார்கள் இதனால் மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் நன்கு சிந்தித்து வாக்களிக்கவும் என ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி தலைமை வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான் தெரிவித்தார்.
மட்டக்களப்பு வெஸ்ஒப் மீடடியா கற்கை நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (28.10.2024) இடம்பெற்ற ஊடக மாநட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியானது 1948 ஆம் ஆண்டு அமரர் விஜயகுமார் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டது இந்த கட்சி ஸ்ரீலங்கா மாகாஜனா மாணவர் ஒன்றியம் ஸ்ரீலங்கா மாகாஜனா யூத் ஜெனரேஷன் ஸ்ரீலங்கா நகர் டிரேட் போன்ற பிரிவுகளைக் கொண்டு நாடளாவிய ரீதியில் இயங்கி கொண்டிருக்கின்றது.
இதன் தற்போதைய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்தின தலைமையில் நாடளவிய ரீதியில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த தேர்தலில் நாங்கள் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்தும் ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்துடனும் இணைந்து என்னுடைய கட்சியின் உறுப்பினர்கள் போட்டியிடுகின்றார்கள்.
நாங்கள் நாடளாவிய ரீதியில் போட்டியிடும் பொழுது இந்த தேர்தலிலே 4 ஆசனங்களை கைப்பற்றுவதற்குரிய முனைப்புடன் களமிறங்கி செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். இதற்கான மக்கள் ஆதரவும் அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது நாட்டில் புரையோடிப்போயுள்ள போதைப்பொருள் பாவனை முற்றாக நிறுத்துவதற்குரிய சட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்கும் போதும் அதனை வரவேற்று நாம் அத் திட்டத்தின் கீழ் ஒன்றுபட்டு செயல்படுவோம் என்ற குறிக்கோளிலே இளைஞர்களாகிய நாங்கள் செயற்பட்டு கொண்டிருக்கின்றோம்.
குறிப்பாக இளைஞர் சமுதாயம் இந்த போதைப்பொருள் பாவனையினால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இதனை அடியோடு இல்லாமல் செய்வதற்கு நாங்கள் ஒன்றிணைவோம் என்று கூறிக்கொண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிரேஷ்ட அரசியல் தலைமைகள் இளைஞர்களுக்கு வழிவிட்டு தேர்தலிலே போட்டியிடாமல் விலகி இருக்கின்றார்கள்.
இது குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு ஒரு பாரிய இழப்பாகும் இதனை சரி செய்வதற்காக அவர்கள் ஆலோசனை மற்றும் அனுபவத்தினையும் அடிப்படையாக வைத்து நாங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து விட்டோம் என்பதையும் இக்கட்டத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேவேளை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் கேள்விக்குறியாக இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் கவனமாகவும் அறிவுபூர்வமாகவும் நன்கு சிந்தித்து எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கான பாராளுமன்ற பிரதிநிதியை மக்களாகிய நீங்கள் சிந்தித்து வென்றெடுக்க வேண்டும். என்பதோடு ஒற்றுமைப்பட்டு எங்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
![]()