மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் இலங்கை போக்குவரத்து டிப்போக்களில் பணி பகீஸ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இந்த பணி பகிஸ்கரிப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த பணி பகீஸ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.