மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைக்காடு பிரதேசத்திலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
காரைக்காடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 20 ஆயிரம் T56 ரக துப்பாக்கி ரவைகள், 300 மிதிவெடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
Post Views: 2