மட்டக்களப்பில் ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் புதிய காரியாலயம் மீண்டும் திருகோணமலை வீதி தாண்டவன்வெளியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14); மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த கட்டகொடவால் சம்பிரதாயபூர்வமாக புதிய காரியாலயத்தை நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மாவட்ட ரீதியாக ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் காரியாலயங்கள் நேற்றும் இன்றும் திறந்து வைக்கப்படும் நிலையில் மட்டக்களப்பிற்கான பிரதான காரியாலயம் திருகோணமலை வீதியிலுள்ள தாண்டவன்வெளி பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கட்சியின் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பா.சந்திரகுமார் தலைமையில் இருதயபுரத்தில் இயங்கிவந்த மாவட்ட பொதுஜன பெரமுனை காரியாலயம் கடந்த அரக்கல போராட்டத்தினையிட்டு தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.