தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் 11 ஆண் கைதிகள் இன்று (12.09) காலை 10.30 மணியளவில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்று வந்த கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.