வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிருமிச்சை பிரதேசத்தில் சீரற்ற காலநிலையினையடுத்து சம்பவதினமான நேற்று முந்தினம் மாலை 5 மணியளவில் திடீரென மழைபெய்ததுடன் மினி சூறாவளி காற்று வீசியது.
இக் காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு சேதமடைந்துள்ளதோடு வீடுகளில் இருந்தவர்கள் காயம் ஏதுவுமின்றி உயிர்தப்பியுள்ளனர் என வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்துள்ளார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2