மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ படத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்திலிருந்து ‘மண்டாடி மண்டாடி’, ‘உசுரே நீதான் புள்ள’, ‘ஒலி வட்டம்’ என்ற அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. குறிப்பாக ‘மண்டாடி மண்டாடி’ பாடலில் நடிகர் சூரியின் நடனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் படகுப் போட்டிகளையும் மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம், இரண்டு நாட்களில் இந்திய மதிப்பில்15 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக பொக்ஸ் ஒபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுமையான கதைக்களத்தால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான ‘மண்டாடி’ படத்துக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், இந்தப் படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ரசிகர்களின் வரவேற்புகளை தொடர்ந்து ‘மண்டாடி’ படத்துக்கு உலகம் முழுவதும் 500-க்கும் அதிகமான திரைகள்  ஒதுக்கப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here