மண்ணீரல் காயத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்!
இந்திய ஒருநாள் அணியின் துணைத் தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பி.சி.சி.ஐ வெளியிட்ட தகவலின் படி, ஸ்கேன் பரிசோதனையில் அவரது மண்ணீரலில் (Liver) காயம் இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், மருத்துவக் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இந்நிலையில், ஸ்ரேயாஸ் தனது சமூக வலைதளப் பதிவில்,
“நான் தற்போது குணமடைந்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் என் உடல்நிலையில் முன்னேற்றத்தைக் கண்டுவருகிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்தும், ஆதரவு அளித்தும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி,”என்று தெரிவித்துள்ளார்.
அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனால், அவர் முழுமையாக குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், எதிர்வரும் தென்னாபிரிக்கா தொடரில் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக உள்ளது.
அவர் விளையாட முடியாவிட்டால், அவரது இடத்தில் சஞ்சு சாம்சன் அல்லது ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![]()