மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு..!!!
நுவரெலியா ரம்பொட வழியாக கண்டி வீதியை இரவு வேளைகளில் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் நேற்று(11.12.2025) இரவு விடுத்துள்ள விசேட அறிவிப்பிலேயே இதனை கூறியுள்ளார்.
தற்போது நுவரெலியா மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் கற்பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுவதற்கு அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுவருகின்றன.
இதனால் நுவரெலியா – கண்டி வீதியில் இரவில் குறித்த வீதியின் ஊாடக பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு மாவட்ட செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
![]()