இலங்கை கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு இந்தியாவில் பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் ( Behindwoods Gold Icon) விருது வழங்கப்பட்டுள்ளது.
மதீஷ, இந்திய பிரிமியர் லீக் போட்டித் தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணி சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடி வருகின்றார்.
பிஹைன்ட்வுட்ஸ் விருது வழங்கும் விழாவில் சினிமா, விளையாட்டு என பல்வேறு துறைகளில் பிரபலமானவர்களுக்கு விருது வழங்கப்படுகின்ற நிலையில் 2024ம் ஆண்டுக்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரமாக மதீஷ பத்திரண தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கட் வீரர்கள், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கட் வீரர்களுக்கு ஏற்கனவே இந்த விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 3