ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஜெனரல்-இசட் போட்காஸ்டருக்கும் இடையிலான நகைச்சுவையான கேள்வி பதில் அமர்வில், பீர், விஸ்கி, ஒயின் அல்லது கள்ளு போன்ற மதுபானங்களை விட அதிகாரத்தை தான் அதிகம் விரும்புவதாக ஜனாதிபதி வெளிப்படுத்தினார்.
விருந்தினர்கள் மது அருந்தும் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் ஜனாதிபதி பங்கேற்பாரா, தடை செய்யப்பட்ட தலைப்புகள் பற்றி அரட்டை அடிப்பாரா, நடப்பு விவகாரங்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்த ஜெனரல்-இசட் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியுமா என்று கேட்டபோது, ஆம் என்று பதிலளித்தார் ஜனாதிபதி.
பதிலுக்கு, தனக்கும் நேர்காணல் செய்பவருக்கும் இடையில் ‘பவர் கேன்’ பகிரப்படுமா என்று ஜனாதிபதி மேலும் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற #AskRanil இளைஞர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகைச்சுவையான உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.