November 18, 2025
மதுபோதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி..!
News News Line Top Updates புதிய செய்திகள்

மதுபோதையில் வந்த கணவனுக்கு எமனான மனைவி..!

Apr 4, 2024

மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த  சம்பவம் பதிவாகியுள்ளது .

இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் , அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந் நிலையில் இவர் குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார் இதன்போது மனைவி அயலவர்களுடன்   இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டு தாக்கியுள்ளனர்.

தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *