மத்திய வங்கி கொள்கை வட்டி வீதம் மாற்றமின்றி தொடரும்!
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, நாட்டின் கொள்கை வட்டி வீதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது.
இதன்படி, ஓரிரவு கொள்கை வட்டி வீதம் 7.75% ஆக மாற்றமின்றி வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (25) நாணயக் கொள்கை சபைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
![]()