Tamil News Channel

மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட வெடி பொருட்கள்!

IMG-20240711-WA0004

யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட்ட மந்துவில் வடக்கு குடியிருப்புப் பகுதியில் காணி ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் தனது  காணியை துப்பரவு செய்த போது நிலத்தின் கீழ் புதைக்கப்பட்ட றம் ஒன்றினுள் வெடிபொருட்களை ஒத்த பொருட்கள் தென்பட்டமையால் அவர் உடனடியாக பொலிஸாருக்கு விடயத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொடிகாமம் பொலிஸாரோடு இணைந்து விசேட அதிரடிப்படையினரும் அவ் இடத்திற்கு விரைந்து    றம்மை எடுத்த போது அதற்குள் வெடி பொருட்கள் காணப்பட்டன.

இவற்றில் 8 மகசின்கள்,2 கைக்குண்டுகள்,3 மிதி வெடிகள் மற்றும் சுமார் 1000 ரவைகளும் மீட்கப்பட்டன.

குறித்த வெடி பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts