மனிதர்களோடு மனிதர்களாக வேற்றுக்கிரக வாசிகள்..!
வேற்றுக்கிரக வாசிகள் மனிதர்களாக மாறுவேடத்தில் பூமியில் வாழக் கூடும் என அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின்படி, வேற்றுக்கிரக வாசிகள் பூமியில், நிலவில் அல்லது மனிதர்களுடன் மனிதர்களாக வசித்து வர வாய்ப்புகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
நீண்ட நாட்களாகவே வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகள் தொடர்பில் ஆய்வுகள் பல முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஹவார்ட் பல்கலைக்கழகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் இதுவரையில் தீர்க்கமான தீர்மானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதேவேளை, பறக்கும் தட்டுகள் நிலத்தின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவை மனித சமூகத்துடன் ஒன்றிணைந்திருக்கலாம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
வேற்றுக்கிரகவாசிகள் பல்வேறு வடிவங்களில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க அரசாங்கம் பாரிய அளவிலான பறக்கும் தட்டு ஒன்றை மறைத்து வைத்துள்ளதாகவும் அண்மையில் முன்னாள் புலனாய்வு அதிகாரி தகவல் வெளிட்டிருந்தார்.
ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் வேற்றுக்கிரக வாசிகள் குறித்த இந்த ஆய்வு அறிக்கை இன்னமும் மீளாய்வுக்கு உட்படுத்தி உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
![]()