Tamil News Channel

மனிதர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு !!

வானியலாளர்களின் இரண்டு சர்வதேச குழுக்கள் 40 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளது.

Gliese 12b என்று பெயரிடப்பட்ட இந்தக் கிரகமானது மனிதர்கள் வாழக்கூடிய கிரகமாகக் கருதப்படுகிறது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து நாசா நடத்திய ஆராய்ச்சியின் பலனாக இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் 2022இல் ஏற்பட்ட வெப்பத்தைப் போன்ற நிலை இந்தக் கிரகத்திலும் இருப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Gliese 12b இன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 42 டிகிரி செல்சியஸ் ஆகும்.

ஆனால், இந்தக் கிரகம் பூமியிலிருந்து 40 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்திருப்பதால் அதை நெருக்கமாகக் கவனிப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இக்கிரகமானது சூரியனை ஒவ்வொரு 12.8 நாட்களுக்கு ஒருமுறை சுற்றி வருகிறது.

Gliese 12b ஐக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குழு, நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகவரகம் செயற்கைக்கோள்களின் தரவுகளைப் பயன்படுத்தி கிரகத்தின் இருப்பு மற்றும் அதன் பண்புகள், அதன் அளவு, வெப்பநிலை மற்றும் பூமியிலிருந்து அதன் தூரம் போன்றவற்றை உறுதிப்படுத்தியது.

ஆச்சரியப்படும் விதமாக இந்தக் கிரகம் பூமியின் அளவு மற்றும் வெப்பநிலை போன்றவையை ஒத்ததாக இருக்கின்றமை என்று கலாநிதி வில்சன் தெரிவித்துள்ளார்.

Gliese 12b போன்ற கோள்கள் மிகக் குறைவாக இருப்பதால் அவற்றை கூர்ந்து – ஆராய்ந்து அதன் வளிமண்டலம் மற்றும் வெப்பநிலை பற்றி அறிந்துகொள்வது அரிது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts