வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதாகக் கூறி திசர நாணயக்கார மூலம் பணம் வசூலித்த சம்பவம் தொடர்பில் மனுஷ நாணயக்காரவை கைது செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இந்த விடயத்தில் அவரைக் கைது செய்ய எதிர்ப்பார்க்கவில்லை என நிதிக் குற்றப் பிரிவு சார்பில் முன்னிலையான குற்றப் புலனாய்வுத் துறை பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, ஜனவரி 29 ஆம் திகதி காலை 9 மணிக்கு முன்னாள் அமைச்சர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி, சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பார் என்று மனுதாரர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
நிலுவையில் உள்ள பிணை மனுவை பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி விசாரிப்பதற்காக திகதி கம்பஹா நீதவான் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.
மனுதாரர் மனுஷ நாணயக்கார சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி நளிந்த இந்திரதிஸ்ஸ தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.