தென்காசி அருகே, குடும்பத் தகராறில் மனைவியை உலக்கையால் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் திருவேங்கடம் தெற்கு பாரப்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி (70) இவரது மனைவி சீதை (65) வயதானாலும் இவர்களுக்கு இடையில் அடிக்கடி சண்டையும் சச்சரவுமாகவே இருந்து வந்திருக்கின்றது.
மேலும் கணவன் மனைவிக்கு இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிப்போய் கைகலப்பாகி அதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி , வீட்டில் இருந்த உலக்கையால் தனது மனைவி தலையிலும், வாயிலும் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சீதை, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மனைவியை அடித்துக் கொன்ற கருப்பசாமி அச்சத்தில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், சீதையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.