குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (09) ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டுபிடிய, உடவெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடவெலவத்த, ஹட்டுபிடிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மரணமடைந்தவரின் உடல், நீதவான் பரிசோதனைக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான கணவனை கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.