நேற்றைய தினம் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் சுற்றாடல் தினத்தை மையப்படுத்தி மன்னார் பிரதான பாலத்தடியில் கண்டல் தாவரங்கள் நாட்டப்பட்ட நிகழ்வு நடைபெற்றது.
இதில் மன்னார் மாவட்ட இணைப்பாளர் பெனடிக்குரூஸ், வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளர் N.M.முகமட் ஆலம், இளைஞர் செயற்பாட்டாளர் பிரியந்தா, மன்னார்நேசகரம் பிரஜைகள் குழு தலைவர் P.S.அன்ரன் மற்றும் இளைஞர்கள் பெண்கள் இணைந்து இந்த செயற்பாட்டை மேற்கொண்டனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Post Views: 2