மஸ்கெலியா பிரதேசத்தில் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு மீண்டும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரதேசத்தை நோக்கிப் பயணித்த காரொன்று எதிர் திசையில் பயணித்த பஸ் ஒன்றுக்கு வழிவிடும் போது காரானது வீதியை விட்டு விலகி காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள 200 அடி ஆழமுடைய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (6) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின் போது காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் திக்ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான காரில் குழந்தை உட்பட நால்வர் பயணித்துள்ள நிலையில் காரில் பயணித்தவர்கள் பாதுகாப்பு இருக்கைப் பட்டையை அணிந்திருந்ததால் பெரிதளவான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.